விஜயதசமி வாழ்த்துக்கள்;
விஜயதசமி என்றால் என்ன?
வெற்றியை தருகின்ற நாள் என்று அர்த்தம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூஜை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடுகின்றோம்.
பத்தாம் நாள் விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும். அன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புதமான நாளாக கொண்டாடுவார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
தீயவை அழிந்த நாள் இன்று ....
நல்லது வெற்றி பெற்ற நாள் இன்று....
வெற்றி தரும் விஜயதசமி கற்றுக்கொள்ள நல்ல நாள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு ,இசைக்கருவிகளின் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ' அ ' என்று எழுத கற்றுக்கொடுப்பது ' வித்யாரம்பம் ' எனப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி! என்றும் தமிழக மாணவர்களின் நலனில் உங்கள் கல்வி சதகம்.